தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 6 ஆண்டுகளாக நிற்கும் அமெரிக்க ஆயுத கப்பல்... விற்பனை செய்ய அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு! - அமெரிக்கா ஆயுத கப்பல்

தூத்துக்குடி: துறைமுகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நிற்கும் அமெரிக்காவின் ஆயுத கப்பல் சேதம் அடைவதற்கு முன்பு, விற்பனை செய்ய அனுமதிக்ககோரிய வழக்கை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது

மதுரை
மதுரை

By

Published : Aug 15, 2020, 1:46 PM IST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் சார்பில் அதன் கடற்பிரிவு துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின்குமார்சிங், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், " தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த எம்.வி.சீமென் கார்டு ஒஹியோ என்ற கப்பலை தருவைகுளம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்த கப்பலில் இருந்த 35 பேர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் கப்பலில் இருந்த 35 பேர் உட்பட அனைவருக்கும் தண்டனை வழங்கி 11-01-2016 இல் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் முக்கிய நபர்களான வாசிங்டன் அட்வான் போர்ட் கம்பெனி ஐஎன்சி நிர்வாகி, செயலாக்க இயக்குனர் முகமது பிரஜூல்லா ஆகியோர் தலைமறைவானதால் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 35 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டு அனைவரையும் விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளை 27.11.2017இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

மேலும், வழக்கில் தொடர்புடைய கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் முதலாம் பிளாட்பாரத்தில் 12.3.2013 முதல் 6 ஆண்டு 9 மாதமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 31.12.2019 ஆம் தேதி வரை கணக்கிட்டதில் அமெரிக்க நிறுவனம் ரூ.2 கோடியே 91 லட்சத்து 13 ஆயிரத்து 634 ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளது.

இந்தக் கட்டணத்தை கேட்டு அமெரிக்க கப்பல் நிறுவனத்துக்கு துறைமுக கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. கப்பலுக்கு உரிமை கோரி கப்பல் நிறுவனம் சார்பில் எங்கும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சேதமடைந்து வருகிறது. கடல் நீர் கப்பலுக்குள் சென்றால் கப்பலை திரும்ப பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, கப்பலை விற்க அனுமதி கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.

ஆனால் மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதாக கூறி எங்கள் கோரிக்கையை ஏற்க தூத்துக்குடி நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே அமெரிக்க கப்பலை விற்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் முடிவெடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "அமெரிக்காவை சேர்ந்த அட்வான் போர்ட் கம்பெனியின் செயலாக்க இயக்குனர், ஓமன் பியூட்சர் டவர் இந்தியா எல்எல்சி நிறுவனம் , தருவைகுளம் காவல் ஆய்வாளர், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details