தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் ஜோடி வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை வெறிச்செயல்

தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்து வருகின்றனர்.

காதல் ஜோடி வெட்டிக் கொலை
காதல் ஜோடி வெட்டிக் கொலை

By

Published : Jul 25, 2022, 8:29 PM IST

Updated : Jul 25, 2022, 10:22 PM IST

தூத்துக்குடி: எட்டையபுரம் அருகேவுள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

கொலை செய்யப்பட்ட ரேஸ்மா, மாணிக்கராஜ்

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு திரும்பினர். இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ரேஸ்மா, மாணிக்கராஜ்

ஆனாலும் முத்துக்குட்டி தனது மகள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 25) மாலை 4 மணியளவில் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பெண்ணின் தந்தை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் ஜோடி வெட்டிக்கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:'உலக மகா நடிப்புடா சாமி' லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள்போல் நடித்து ஏமாற்றும் முயற்சி; இருவர் கைது!

Last Updated : Jul 25, 2022, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details