தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற ஊழியர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதை தவிர்க்க கடிதம்! - நீதிமன்ற ஊழியர்களுக்கு போலீசார் பரிசு

தூத்துக்குடி: நீதிமன்ற ஊழியர்களுக்கு, காவல்துறை சார்பில் தீபாவளி பரிசு பொருள்கள் வழங்குவதை தவிர்க்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி கடிதம் எழுதிஉள்ளார்.

gift-items-to-court-staff-in-thoothukudi
gift-items-to-court-staff-in-thoothukudi

By

Published : Nov 12, 2020, 3:55 PM IST

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில்,

"அனைவரும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட எனது வாழ்த்துக்கள். அதேவேளையில் மாவட்ட போலீசார் பலர் நீதிமன்ற ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகளாக பட்டாசு, இனிப்பு உள்ளிட்டவை வழங்குவதாக தெரிகிறது. சட்ட விதிமுறைகளின்படி இதுவும் ஒரு வகை லஞ்சம் ஆகும்.

எனவே காவல்துறை சார்பில், நீதிமன்ற ஊழியர்களுக்கு பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல்துறை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை: முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details