தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தில் ரூ.1 கோடியில் சந்தை மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழாவும், நபார்டு திட்டத்தில் ரூ.65 லட்சத்தில் வடக்கு சுப்பிரமணியபுரம் தார்ச்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பணிகளைத் தொடங்கிவைத்தார். மேலும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மூன்று பெண்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது:
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கை என்ற அண்ணாவின் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.