நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார், அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.