பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு திருச்செந்தூரில் இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை சார்பாக பங்கேற்க அந்நாட்டின் அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் வந்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
'காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமையில்லை' - இலங்கை அமைச்சர் - காஷ்மீர் உள்நாட்டு விவகாரம்
தூத்துக்குடி: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை எனவும், அது குறித்து கருத்து சொல்ல தங்களுக்கு உரிமையில்லை என்றும் இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் தெரிவித்துள்ளார்.
Radhakrishnan
அப்போது பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை எனவும், அதில் கருத்து சொல்ல இலங்கைக்கு உரிமையில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு தற்போது அமைதி நிலவிவருவதாகவும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.