தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஊதுகோலாக கவர்னர், நேத்து பெய்த மழையில முளைத்த காளானாக தலைவன்” - பாஜகவை சாடிய கீதாஜீவன்! - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா

கருணாநிதி நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்
கருணாநிதி நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்

By

Published : Jul 14, 2023, 11:29 AM IST

தூத்துக்குடி:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்

நிகழ்ச்சியில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், “முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். 2 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்று உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன் வருகின்றனர். 4.0 என்ற திட்டத்தை கொண்டு வந்து அனைத்து ஐடி நிறுவனங்களும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

அதில் சேரும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அது தான் திராவிட மாடல் ஆட்சி. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கட்சியின் ஊதுகோலாக ஆளுநர் இருக்கிறார். நேத்து பெய்த மழையில முளைத்த காளான் பாஜக தலைவனாக இருக்கிறார். எல்லாமே நாங்க தான் என்று தலைக்கனத்தோடு பேசிக் கொள்கின்றனர்.

நாம் அப்படி அல்ல கொள்கையோடு, துடிப்போடு தமிழன் வாழ்வு பெற வேண்டும், தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கோடு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் வழியில் போய்க் கொண்டிருக்கின்றோம். மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணி செய்ய வேண்டும். அதிமுக ஒரு அடிமை ஆட்சி நடத்தியது. எடப்பாடியின் 5 வருட ஆட்சி எப்படி இருந்தது என்று மறந்துவிட்டு பேசுகின்றனர்.

இந்த ஐந்து வருடத்தில் யாரையும் கேட்பதில்லை எதுக்கெடுத்தாலும் ‘உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா, ஆமாம் சாமி ஆமாம் சாமி’ என்று தலையாட்டி ஆட்சி நடத்தினர். காரணம் உங்கள் குடுமி மோடியின் கையில் இருந்தது. ஆளுநர் தமிழகம் என்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியே போனவர் தான் எடப்பாடி. ஆகவே அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. அவருக்கு எப்படி பதவி வந்தது என்பது நமக்குத் தெரியும். தவழ்ந்து போய் பதவி வாங்கினார். அதற்குண்டான வீடியோ உள்ளது.

ஆனால் அந்த அம்மாவையே உதைத்து தள்ளிவிட்டு அந்த சேருக்கு ஆசைப்பட்டு வந்தார். எடப்பாடி கிட்ட இருந்து ஒவ்வொருவராக உருவி நாம் வைத்துக் கொள்வோம் என்று பாஜக நினைக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான ஆட்சி மாற்றத்திற்கு உண்டான தேர்தல். மோடி ஆட்சியில் எதையும் நிறைவேற்றவில்லை. கேஸ் விலை 450 இருந்தது தற்போது ஆயிரத்து 150 ஆக கூடி உள்ளது. கேஸ் விலை நான்கு மாதம் மானியம் போட்டனர். ஆனால் எல்லா அக்கவுண்டும் தற்போது க்ளோஸ் ஆகிவிட்டது.

காரணம் மினிமம் பேலன்ஸ் வேண்டும் என்பதால். வேலைவாய்ப்பு தருவோம் என்று சொன்னீர்கள். சுங்க கட்டணம் குறைக்கப்படும் என்றீர்கள். ஆனால் பணம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏழை எளிய எந்த மாநில வளர்ச்சிக்குண்டான திட்டங்களும் இங்கு கிடையாது. கல்விக்கடனுக்காக நம்மளை துன்புறுத்தி வருகின்றனர். பெட்ரோல் விலை எதுவுமே குறைக்கவில்லை. தன்னை பற்றி எதுவும் நினைக்காமல் பாஜக, அதிமுக, திமுக மட்டுமே குற்றம் சொல்கின்றனர்.

மு.க ஸ்டாலின் 85% வாக்குறுதி நிறைவேற்றி இருக்கிறார். செப்டம்பர் 15 இல் மகளிர்க்கு பணம் கொடுக்கப் போகின்றார். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த அளவுக்கு கனிமொழி நிற்பது நமக்கு தெரியும். ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும். 40க்கு 40 வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கு நான் பணியாற்றிட வேண்டும். ஆகவே நம் அனைவரும் வருகின்ற தேர்தலை நோக்கி களப்பணி ஆற்றுவோம்” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டம்: இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details