தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமொழி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூட தெரிவித்தது கிடையாது - தமிழிசை - கனிமொழி

தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவித்ததுக் கிடையாது என பாஜக வேட்பாளர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழிசை சவுந்தர ராஜன்

By

Published : Mar 30, 2019, 5:48 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இறைவனை வணக்கி விட்டு ஆரம்பிக்கும் எல்லா நிகழ்வுகளும் வெற்றியை தரும். ஆனால் திமுக வேட்பாளர் கனிமொழி விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவித்தது கிடையாது.

அப்படி என்றால் விநாயகரை கும்பிடுபவர்கள் அனைவரும் அவர்களுக்கு வேண்டப்படாதவர்கள். 2ஜி வழக்கு கனிமொழி தலையில் மட்டுமல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிலும் தொங்குகிறது. சாதிக்பாட்ஷா கொலை வழக்கினை விசாரணை நடத்தினால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என்று நமக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


ABOUT THE AUTHOR

...view details