தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைகை மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த கனிமொழி - தூத்துக்குடி

தூத்துக்குடி: முத்தையாபுரம், சூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் கனிமொழி தனக்கு குரல் சரியில்லை என சைகை மொழியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் கனிமொழி

By

Published : Apr 16, 2019, 7:49 AM IST

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களான திமுகவின் கனிமொழி, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் தேர்தல் பரப்புரைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு, விக்டோரியா சாலை, பாத்திமா நகர் பகுதி, இனிகோ நகர், முத்தையாபுரம் சூசை நகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவரை, வாக்கு சேகரித்து பேசுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தன்னால் பேச முடியாத அளவுக்கு குரல் வளம் குன்றி இருப்பதாக கூறிய கனிமொழி சைகை மொழியில் பேசினார் கனிமொழி.

இதை தொடர்ந்து, திமுக வேட்பாளர் கனிமொழி தரப்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவுமான கீதாஜீவன் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details