தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதே பாஜகவின் சாதனை' -கனிமொழி சாடல்! - dmk

தூத்துக்குடி: பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியில் தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதே மிகப்பெரிய சாதனை என்று கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.

கனிமொழி

By

Published : Mar 29, 2019, 3:14 PM IST

தூத்துக்குடி நகரத் தந்தை என்று அழைக்கப்படும் குரூஸ் பெர்னாண்டஸ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கலந்துகொண்டு குரூஸ் பெர்னாண்டஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி நகர தந்தைக்கு கனிமொழி மரியாதை

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

"தூத்துக்குடியின் நகரத் தந்தை என அழைக்கப்படும் குரூஸ் பெர்னாண்டஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை குரூஸ் பெர்னாண்டசுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதுதான். திமுக ஆட்சியில் ஸ்டாலினிடம் கூறி நிச்சயம் குரூஸ் பெர்னாண்டசுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என நேற்று வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் தமிழிசை கூறியிருக்கிறார். அவர்களால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

உண்மையில் தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் திட்டம் எல்லாம் வேண்டாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்த்தாலே போதும். கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதே அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை" என்று விமர்சித்தார்.

தூத்துக்குடி நகர தந்தைக்கு மரியாதை

ABOUT THE AUTHOR

...view details