தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இரத்த தான முகாம், அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (அக்.3) நடந்தது. இம்முகாமை எம்பி கனிமொழி தொடங்கிவைத்தார்.
பின்னர், அவரும், அதே முகாமில் இரத்த தானம் செய்தார். தொடர்ந்து இரத்த தானமளிக்க முன்வந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதில், தொண்டர் அணி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ரூ.18.50 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க :7ஆம் தேதி ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!