கேரள மாநிலம் மூணாறு பெட்டிமுடி பகுதியில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில், பெரும்பாலனோர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்களே.
மூணாறு நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி ஆறுதல்! - kanimozhi mp
தூத்துக்குடி: மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆறுதல் கூறினார்.
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்பி
இந்தச் சூழ்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கயத்தாறில் நேரில் சந்தித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், வேலைவாய்ப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:கனிமொழி குற்றச்சாட்டு தவறானது'- அமைச்சர் கடம்பூர் ராஜூ