தூத்துக்குடி:புயல் எச்சரிக்கையால் பாதுகாப்புக்காக மாலத்தீவு கடற்கரையோரம் கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடற்படை கைது செய்ததாக கூறப்படும் நிலையில், அவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் மொத்தம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4 இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டன. பழைய மாநகராட்சி அருகே உள்ள பெரிய காட்டன் ரோட்டில் புதியதாக அமைந்துள்ள உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
12 மீனவர்கள் விடுதலைக்காக மத்திய அரசுக்கு கடிதம்:பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "புயல் வரக்கூடிய அபாயம் இருந்த காரணத்தினால் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு பகுதிக்கு சென்று விட்டனர். அப்படி சென்ற மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.