தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 500 ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கனிமொழி எம்.பி. - தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்

தூத்துக்குடி: விளாத்திகுளம் பகுதியில் 500 ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

kanimozhi-mp
kanimozhi-mp

By

Published : May 17, 2020, 7:29 PM IST

உலகை உலுக்கும் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தனியார் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் அத்தியாவசியப் பொருள்களை வழங்கிவருகின்றனர். அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 500 ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பிரட், சேலைகள், முகக் கவசங்கள், கையுறை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய அத்தியாவசியத் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வசந்தம் ஏ.சி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் மோடி உரையில் இல்லை: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details