நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தொகுதி முழுவதும் தனது பிரச்சாரத்தை துவங்கி விட்ட நிலையில் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
ஆட்சிக்காலத்தில் செய்யாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் - கனிமொழி குற்றச்சாட்டு!
தூத்துக்குடி: ஆட்சிக்காலத்தில் செய்யாமல் விட்டுவிட்டு தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் என அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, " நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் விபத்து ஏற்பட்டால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விடும். பாஜக என்ன நினைக்கிறதோ அதை செய்கிற ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் செய்யாததை மீண்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட நகைச்சுவை வேறு இருக்கமுடியாது. முழுக்க முழுக்க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பாக வாழ மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் ஸ்டாலினும் ஆட்சிப்பொறுப்பிற்கு வரவேண்டும்", என கூறினார்.