தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார்' -  அமைச்சர் கடம்பூர் ராஜு - kadambur raju hits stalin

தூத்துக்குடி: அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுவதாகவும் அதன் விளைவாகவே அவர் நிதானமின்றி பேசுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

kadambur raju
kadambur raju

By

Published : Jan 30, 2020, 1:15 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பயணியர் விடுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தவர்கள் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணையை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பிப்ரவரி 22ஆம் தேதி திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு மண்டபம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா நடைபெற இருப்பதாகவும் அவற்றில் முதலமைச்சர் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசு சார்பில் 601 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ பேட்டி

சுங்கச்சாவடிகளில் அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது தொடர்பாகப் பேசிய அவர், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க மொழி தெரிந்தவர்கள் அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைக்கு அரசு அறிவுறுத்தும் என்று கூறினார்.

மேலும், அரசைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாகவும் அதன் வெளிப்பாடாகவே பொது நிகழ்ச்சிகளில் நிதானம் இன்றி அவர் பேசிவருவதாகவும் விமர்சித்த அவர், ஒரு தலைவருக்கு இதுபோன்ற பேச்சுகள் அழகல்ல எனவும் கூறினார்.

இதையும் படிங்க: 'விருது கொடுத்தவரை உதைப்பேன் எனும் ஸ்டாலின் பேச்சு' - பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details