தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரியல் எஸ்டேட் பிரமுகரின் மகன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு - ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : ரியல் எஸ்டேட் பிரமுகர் ஆறுமுகசாமியின் மகன் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மகன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மகன் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

By

Published : Jan 22, 2020, 10:25 PM IST

தூத்துக்குடி அண்ணாநகர் 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் பாலமுருகன். பாலமுருகனுக்கும், தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்த முனியசாமி என்ற பொன் முனியசாமியின் தங்கை முனீஸ்வரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக முனீஸ்வரி பாலமுருகனை பிரிந்து தனியே அவருடைய அம்மா வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து பாலமுருகன், சமாதானம் பேசி மனைவியை அழைத்தபோது முனீஸ்வரி வர மறுத்து அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக பாலமுருகனுக்கும் முனீஸ்வரியின் சகோதரர் முனியசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முனியசாமி தன் கூட்டாளிகளான தெற்கு சங்கரபேரியை சேர்ந்த மணிகண்டன், தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சண்முகராஜ், ராமலிங்கம், கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்ய திட்டம்தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27.10.2013 அன்று பாலமுருகன் தனது வேலை தொடர்பாக வெளியூர் செல்வதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் வந்தார். இதை நோட்டமிட்ட முனியசாமியும் அவருடைய கூட்டாளிகளும் பாலமுருகனை பின்தொடர்ந்து வந்து புதிய பஸ் நிலையத்தில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த முனியசாமியும், அவருடைய நண்பர்களும் பாலமுருகனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆறுமுகசாமி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி p.s. கௌதமன், குற்றம்சாட்டப்பட்ட முனியசாமி என்ற பொன் முனியசாமி, மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் ஆஜராகி வாதாடினார்.

ABOUT THE AUTHOR

...view details