தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அலுவலகத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு  ஸ்ரீவைகுண்டம் தொகுதி  ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்  Srivaikuntam constituency  Srivaikuntam constituency Congress candidate  Congress candidate Urvasi Amirtaraj  Urvasi Amirtaraj  ஐ ரெய்டு  IT Raid
IT Raid on Urvasi Amirtaraj Office

By

Published : Apr 2, 2021, 10:09 AM IST

Updated : Apr 2, 2021, 10:26 AM IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதனும் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி டூவிபுரம் முதல் தெருவில் ஊர்வசி அமிர்தராஜின் தற்காலிக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் தங்கியிருந்து கட்சிப் பணிகளை செய்து வருகின்றனர்.

இங்கு சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று (ஏப் 1) இரவு அங்கு சென்ற தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல இணை ஆணையர் சேகர் தலைமையிலான எல்லை பாதுகாப்பு படையினர் அலுவலகத்தை சுற்றிவளைத்து, தேர்தல் பொது பார்வையாளர் குந்தன் யாதவ்க்கு தகவல் தெரிவித்தனர்.

வருமான வரித்துறையினர் சோதனை

பின்னர் அங்கு விரைந்த வருமான வரித்துறையினர், சுமார் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், சுமார் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க:தர்மபுரியில் அமைச்சரின் சம்பந்திக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் சோதனை!

Last Updated : Apr 2, 2021, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details