தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 1, 2023, 5:44 PM IST

ETV Bharat / state

திமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் அதிகரிப்பு - கனிமொழி எம்.பி.!

கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்யும் நோக்கில், திமுக ஆட்சியில் கிராமசபைக் கூட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi
கனிமொழி

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி

தூத்துக்குடி:மே தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள் பேருந்து வசதி, பட்டா மாற்றம், சாலை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து உரையாற்றிய திமுக எம்.பி. கனிமொழி, ''கிராம மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு, அதை சரி செய்து தர வேண்டும் என்பதற்காகத் தான், முதலமைச்சர் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே கிராம சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், முதலமைச்சர் ஸ்டாலின். ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், தனித் துறையை உருவாக்கி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் அதிகளவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் மாவட்டம், தூத்துக்குடி. அதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜூக்கு எனது பாராட்டுகள். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் எந்த நேரமாக இருந்தாலும் தொடர்ந்து உங்களுக்காக பாடுபடக்கூடியவர். சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, உங்களது கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றக் கூடியவர். அதேபோல் தன் பகுதியின் சாதாரண சாமானியன் தமிழ்நாட்டில் எங்கிருந்து அழைத்தாலும், பிரச்னையை சரி செய்யக் கூடியவர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் மக்களுக்கு கேழ்வரகு விநியோகிக்கப்படும் - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ABOUT THE AUTHOR

...view details