தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம், தூத்துக்குடி லாரி புக்கிங் அசோசியேசன் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (ஜூலை21) நடைபெற்றது.
இதில் பேசிய லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி, “கரோனா காலத்திலும் டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கரோனா காலத்தில் டீசல் பயன்பாடு குறைந்துள்ள நேரத்திலும் டீசல் விலை இந்தியாவில் 15 ரூபாய்க்கு மேல் அதிகப்படியாக உயர்த்தப்பட்டிருப்பது லாரி உரிமையாளர்களை பாதிப்படையச் செய்துள்ளது.
இதுபோக சுங்கச்சாவடிகளில் லாரிகளுக்கு அதிகப்படியான சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவருகிறது. இதில் 15 விழுக்காட்டிற்கும் மேல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதால், தொழில் நஷ்டம் அடைகிறது. இது தவிர சாலை வரி உயர்வு, லாரிகளுக்கான மாதத் தவணைகள் உள்ளிட்டவை லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில் சுங்க கட்டணம், சாலை வரி உயர்வு, காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை அரசுக்கு மனு அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.