தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜீன்குமார், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வளார் தாமஸ் தலைமையிலான காவல் துறையினர் கொட்டார்விளை அங்கமங்கலம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நாராயணன் (68) எனும் முதியவரை விசாரணை செய்ததில் அவருக்கு சொந்தமான கொள்ளுப்பட்டறையில் வாள், கத்தி, அரிவாள், பாக்கெட் அரிவாள், சின்ன வீச்சு அரிவாள், வீச்சரிவாள் உள்ளிட்ட 23 ஆயுதங்களை சட்டவிரோதமாக தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது.