தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று விலை மதிப்பற்ற மனித உயிர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒரு சட்டம் இயற்றி அந்த சட்டம் சரியாக இயற்றப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்த காரணத்தினால் இதுவரையில் தமிழ்நாடு அரசால் இதற்கு தடை விதிக்க முடியவில்லை.
ஆதலால் முதலமைச்சர் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை ஒரு அவசர சட்டமாக கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதல் பெற்று உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாத வலுவான சட்டமாக அதை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன்.
அதுபோல் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் புற்றீசல் போல் இருக்கின்ற தனியார் பள்ளிகள் ஆங்காங்கே கல்வி கட்டணம் என்கிற பெயரில் பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி முதல் வகுப்பு இரண்டாவது என்று சொல்லக்கூடிய இந்த பிரிவுகளில் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். லட்சக்கணக்கில் கல்விக் கொள்ளையில் ஈடுபடுகின்ற அந்த கல்வி நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு உதாரணமாக ஒரு பள்ளி எல்கேஜி மாணவனுக்கு என்ன பெருசா சொல்லி கொடுக்க போறாங்க, அதற்கு ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். மேலும் எல்கேஜி பிரிகேஜியஜல் சேர்க்க பெற்றோர்களிடையே நன்கொடை என்ற பெயரில் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. அந்த பள்ளிகள் மீது மிக கடும் நடவடிக்கை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டும்.