புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " நடைபெற்று முடிந்த மக்களவை, இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள். நடைபெற உள்ள நான்கு இடைத்தேர்தல்களிலும் புதிய தமிழகம் கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு தருகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 1 ஆம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 100 கிராமங்களில் வாக்குக்கேட்டு பரப்புரை செய்துள்ளேன்.
"மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர வலியுறுத்துவேன்" - கிருஷ்ணசாமி! - thenkasi constituency
தூத்துக்குடி: தென்காசியில் தான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் மிக கணிசமான வாக்குகள் உள்ளது. அந்த வலிமைகொண்டு அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வோம். புதிய தமிழகம் கட்சியினர் அதிமுகவுடன் நல்ல இனக்கத்துடன் செயல்படுகிறோம். இந்த அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
தென்காசியில் நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்துவேன். ஓட்டப்பிடாரத்தில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் " என்றார்.