தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யும் கனிமொழி - நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி: திமுக சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் கனிமொழி மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

கனிமொழி

By

Published : Mar 20, 2019, 7:32 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதித் தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பின்னர் கனிமொழி முதல் முறையாக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி வந்த அவருக்கு மாவட்ட திமு‌க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மேளதாள முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை விடுபட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான். இப்போது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதியே தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர், பெரியார், அண்ணா உள்பட பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போல்பேட்டையில் திமுக தலைமைத் தேர்தல் காரியாலயத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details