தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன? - மீனா கொலை சம்பவம்

Husband kills Wife: தூத்துக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்
தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 10:58 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம் பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்த பால் ராஜின் மகன் ராஜ்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (28). இவர்களுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு சுதர்சன், பாலகிருஷ்ணன் என்ற இரு மகன்களும், பவித்ராதேவி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக ராஜ்குமாருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலை தொடரவே, இன்று (அக்.31) வழக்கம் போல மீனாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, தகராறு முற்றிய நிலையில் வீட்டிலிருந்த அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றுள்ளார், ராஜ்குமார். அதற்குள்ளாக மீனா தப்பித்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். ஆனாலும் அவரை விடாமல் விரட்டி வந்த ராஜ்குமார், பின்னால் வந்து தலையில் வெட்டியுள்ளார். இதில் வீட்டின் வாசலில் மீனா சரிந்து விழுந்தார்.

அதன்பின் சரிந்து விழுந்த மீனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார், மீனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடி கணவர் ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர்.

மேலும், குடும்பத்தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாயுமா? போலீசாரின் அடுத்த மூவ் என்ன?

ABOUT THE AUTHOR

...view details