தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணைய துணைக் காவல் கண்காணிப்பாளர் குமார் மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில், ஜூலை 14ஆம் தேதி ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
ஜூலை 15ஆம் தேதி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் விணிலா, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சங்கர், தற்போதுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகை இதையடுத்து 3ஆவது நாளாக இன்று(ஜூலை 16) கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலை காவலர்கள் வேல்முருகன், செந்தூர்ராஜா, மாரிமுத்து ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் மதுரை சிறையில் உள்ள காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் அதுகுறித்த அறிக்கைகள் மனித உரிமை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: காவல் ஆய்வாளர் உள்பட 20 பேரிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!