தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழா மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
உலக மனித நேய தினத்தில் மக்களுக்கு உதவிய அமைச்சர்! - human being day
தூத்துக்குடி: கோவில்பட்டியில் உலக மனித நேய தினம் கொண்டாடப்பட்டது.
minister kadampur raju
அப்போது,அமைச்சர் கடம்பூர் ராஜூ நலிவடைந்தவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கி சிறப்புரையாற்றி அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். சமீபத்தில், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த கடம்பூர் ராஜூ, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.