தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் கனமழை.. தண்ணீர் தேங்கிய இடங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாஜக துணைத்தலைவர்!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீரானது தேங்கியதால், அதனை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Thoothukudi
Thoothukudi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:16 PM IST

தண்ணீர் தேங்கிய இடங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாஜக துணைத்தலைவர்

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் கடந்த முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ் சாலை ரோடு, வஉசி சாலை, லூர்தம்மாள்புரம், ஆரோக்கியபுரம், மேட்டுப்பட்டி, முருகன் தியேட்டர், கலைஞர் நகர், கதிர்வேல் நகர் என பல்வேறு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் மழைநீரானது தேங்கியுள்ளது.

இந்நிலையில், மழைநீர் தேங்கிய இப்பகுதிகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் சசிகலா புஷ்பா மற்றும் அமைச்சர் கீதா ஜீவனிடம் குறைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கூறியதாவது; "ஒரே ஒரு நாள் மழைக்கே தூத்துக்குடி தாங்க முடியாத அளவுக்கு திறனற்ற அரசாக திமுக உள்ளது. மாநகர் முழுவதும் தண்ணிக்காடாக இருக்கிறது. மாதா கோவில் ரோடு, லூர்தம்மாள்புரம் மக்கள் மிகவும் பாவம். முன்னர் நானும் மேயராக இருந்துள்ளேன். ஒருநாள் கூட தண்ணீர் தேங்க விடாமல் பார்த்தேன். தற்போது மோடி ஸ்மார்ட் சிட்டி மூலம் ஆயிரம் கோடி ரூபாய் தூத்துக்குடி மாநகராட்சிக்கு கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அந்த பணம் எங்கே போனது.

நிர்வாக திறனற்ற அரசாங்கமாக திமுக அரசாங்கம் இருக்கிறது என்பதற்கு இந்த மழை தண்ணீர் தான் காரணம். இந்த மழையை கூட தாங்க முடியவில்லை என்றால் ஒரு புயல் வந்தால் மக்களை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? தற்போது கொசு உற்பத்தி அதிகமாக உருவாகும் நிலைக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஜிஎஸ்டி வரி பணம் போன்ற பல கோடி ரூபாய் நிதியானது, மத்திய அரசிடம் வாங்கியும் தமிழக அரசால் சிறப்பான ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை. காரணம் எங்கு பாத்தாலும் ஊழல். இதனை தடுக்க வேண்டும்.

திமுக அரசு தண்ணீர் வெளியேற்றவில்லை என்றால் நாங்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம். பாஜக மக்களுக்காக இருக்கிறது. அரசாங்கத்திடம் ஒரு மோட்டார் கூட சரியான முறையில் இல்லை. அப்போது என்ன நீங்கள் நிர்வாகம் செய்கிறீர்கள்?. மாநகராட்சி சார்பில் லாரிகள் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படவில்லை. மக்கள் மிகவும் பாவம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திமுக அரசு நல்லாட்சி கொடுக்க மாட்டார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் நிச்சயமாக பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது; "தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலமும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவ காலனி பகுதிகளில் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை தொடங்கும் நிலையில் உள்ளது. இது பள்ளமான பகுதியாகும். நீரை பம்பு மூலம் வெளியேற்றுவதா? கிராவிட்டி மூலம் போய் விடுமா என்பதை கொண்டு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மழைநீரானது எங்கெங்ல்லாம் தேங்கி இருக்கிறதோ. அங்கே மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா இதற்கு முன்னர் ஆய்வு செய்து, திமுக அரசை குற்றம் சாட்டினார். இது குறித்த கேட்ட கேள்விக்கு? ஆயிரம் கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தது அதிமுக எடப்பாடி ஆட்சியில், மக்களுக்கு தேவையான திட்டத்தை அவர்கள் தரவில்லை. பூங்காகளுக்காக தான் திட்டம் கொண்டு வந்தார்கள். எல்லா திட்டமிடுதலும் அதிமுக ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. முடிவடையாமல் இருந்த பணிகளை தற்போது முறைப்படி செய்து வருகிறோம். பூங்காக்களுக்கு எல்லாம் ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அகலமான பாதையை சுருக்கியது தான் மிச்சம்" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை... குஷ்பு பேசிய சர்ச்சையாக மாறியது எப்படி..! விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details