தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி ஊராட்சியில் உள்ள சரள் குவாரிகளில் திருப்பூரிலிருந்து கொண்டுவரப்படும் ராசயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி குவாரிகளில் உள்ள குட்டைகளில் நீரின் நிறம் மாறியுள்ளது.
இதனால் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் நீரை குடிக்கும்போது தொற்றுவியாதி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரசாயன கழிவுகளை அகற்றுவதுடன், இச்செயலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.