தூத்துக்குடி, தென் மண்டல காவல் துறையின் தலைவராக முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றார். அவரை டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி காவல் துறை தீவிரமாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் லாக்கப் மரணம் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே காவலர்களுக்கு போதுமான அளவு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி ஒன்றே மனிதர்களை மிகச்சிறந்தவர்களாக்கும் வழிகளாகும்.