தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில், தசரா திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று (அக்.25) மாலையுடன் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, போதிய பேருந்துகள் வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் இயக்கப்பட்ட பேருந்துகளில் படியில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர். அப்பொழுது, திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்த கலா (38) என்பவர், திருநெல்வேலி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு ஒரே பணிக்கு இருத் தேர்வுகளை நடத்துவதா? - ஆசிரியர்கள் தேர்வு விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்