தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மோகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் பிறழாமல் செயல்படுத்தி வருகிறார்கள். நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே. வாசன் பரப்புரை - election campaign
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பரப்புரை மேற்கொண்டார்.
ஜி. கே வாசன் பரப்புரை
ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய-மாநில அரசுகள் ஒத்த கருத்துடன் செயல்படுவதால்தான் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு தர முடிகிறது. எனவே வருங்காலத்திலும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவதற்கு மாநில அரசுடன் ஒத்த கருத்துள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.