தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முயல் வேட்டையாடிய நால்வருக்கு அபராதம்! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: கயத்தார் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தலா பத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Four fined for rabbit hunting - Forest Department action!
Four fined for rabbit hunting - Forest Department action!

By

Published : Jul 27, 2020, 3:30 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் கயத்தார் வனச்சரக அலுவலர், பாதுகாப்பு காவலர்கள் கொண்ட குழு வனப்பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர்.

அப்போது கயத்தார் தாலுகா வெள்ளாளங்கோட்டை ‌ கிராமத்திலுள்ள கண்மாய் பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள், வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றுள்ளார்.

ஆனால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் எஸ்.சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ராஜாராம், மூவிருந்தாளியைச் சேர்ந்த ரங்கராஜ், புது அப்பநேரியை சேர்ந்த முனீஸ்வரன், கோவில்பட்டி சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் நான்கு பேரும் காட்டு முயலை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், நான்கு பேருக்கும் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details