தூத்துக்குடி: கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் (31). இவர் தனது நண்பர் கணேஷ்குமார் என்பவருடன் சேர்ந்து பேருந்து நிலையம் அருகே இரும்பு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த அவருக்கு, கடையில் இருந்த ரூ. 5 லட்சம் பணம், 2 டன் இரும்பு கம்பிகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
தனிப்படை
அதில், முகமூடி அணிந்த நபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றுவதும், பணத்தை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. பின்னர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சாத்தூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் நான்குவழிச்சாலை டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவை தனிப்படையினர் சோதனை செய்தனர். அதில் அவர்களது லாரி சென்றது தெரியவந்தது.
அதன்பிறகு அடுத்தடுத்த டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். கடைசியாக தஞ்சாவூர் அருகே உள்ள புதுக்கோட்டையில் லாரி நிற்பது தெரியவந்தது.