தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு ஒன்பது பேருடன் சென்ற கப்பல் மீண்டும் தூத்துக்குடி திரும்புகையில் அதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகது அதீப் சட்டவிரோதமாக வந்ததையடுத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து குடியுரிமை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
பிடிபட்ட முன்னாள் துணை அதிபர் நாளை ஒப்படைப்பு! - Ahmed Adeeb
தூத்துக்குடி: சட்டவிரோதமாக இந்தியவுக்குள் நுழைய முயன்று கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் நாளை அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகது அதீப்
இந்நிலையில், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு ராணுவத்திடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளார். அவரை அழைத்துச் செல்ல மாலத்தீவு ராணுவ உயர் அலுவலர்கள் தூத்துக்குடிக்கு நாளை வரவுள்ளனர்.