தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 11ஆம் தேதி, மாலத்தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற 'விர்கோ9' என்ற சிறிய ரக கப்பலில் இந்தோனேசியாவை சேர்ந்த எட்டு மாலுமிகளும், ஒரு இந்தியரும் சென்றனர். அதனை தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி கருங்கல்லை மாலத்தீவில் இறக்கிவிட்டு, தூத்துக்குடிக்கு வந்த அந்த கப்பலில் கூடுதலாக அடையாளம் தெரியாத ஒரு நபர் வருவதாக இந்திய உளவுத்துறையிரைக்கு தகவல் கிடைத்தது.
இந்தியாவுக்கு தப்பி வந்த மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் - extradited
தூத்துக்குடி: கருங்கல் ஏற்றி வந்த கப்பலில், மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தப்பி வந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற கடற்படை அலுவலர்கள், மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சிறிய ரக கப்பலை சோதனை செய்தனர். அதில் கூடுதலாக ஒரு நபர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் என்பது தெரியவந்தது. பின்னர் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், பல்வேறு புகார்கள் இருப்பதால் இந்தியாவுக்கு தப்பி வந்தது தெரிய வந்துள்ளது.