தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லிக்குத்தான் ராஜா, தமிழ்நாட்டில் கூஜாதான்.. பாஜகவை விமர்சித்த கடம்பூர் ராஜூ

Kadambur Raju Criticized BJP: அதிமுக என்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் டெல்லி செங்கோட்டை வரை சென்று அங்கு தான் நிற்கும் என அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

பாஜக டெல்லிக்கு ராஜா நாளும் தமிழ்நாட்டில் கூஜா தான் என பாஜகவை சாடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பாஜக டெல்லிக்கு ராஜா நாளும் தமிழ்நாட்டில் கூஜா தான் என பாஜகவை சாடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 4:03 PM IST

பாஜக டெல்லிக்கு ராஜா நாளும் தமிழ்நாட்டில் கூஜா தான் என பாஜகவை சாடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: எட்டயபுரத்தில் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ டெல்லி செங்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடி பறக்கும் எனவும், மெகா கூட்டணியை எடப்பாடி அமைப்பார் எனவும் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (09.10.2023) நடைபெற்றது. இந்த கூட்டமானது அதிமுக நகர் செயலாளர் ராஜ்குமார் தலைமையில், மாநில இலக்கிய அணி இணைச்செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு, கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சினை? திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?

மேலும் அவர் பேசுகையில், “பாஜக டெல்லியில் ராஜா என்றாலும் தமிழ்நாட்டில் கூஜா தான். எந்த தேசிய கட்சியும் தனியாக இருந்து வெற்றி பெற முடியாது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் இருந்து புறப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் டெல்லி செங்கோட்டை வரை சென்று அங்கு தான் நிற்கும். டெல்லி செங்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடி பறக்கும். அந்த ட்ரெயினில் ஏறியவர்கள் புத்திசாலி.

திமுகவுடன் இருக்கும் கட்சி பிரிந்து வந்தாலும் சரி. மற்ற கட்சிகளும் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு நன்மை. சேருகின்ற காலமும் விரைவில் வரும். மெகா கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்”, என கூறியுள்ளார். மேலும் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும். அந்த சூழ்நிலை தற்போது உள்ளது என கூறிய அவர், 2021ல் திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: "இங்கே இருக்கக்கூடிய எந்த குளத்திலும் தாமரை மலராது" - கனிமொழி எம்.பி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details