தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது: காரணம் என்ன? - தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்

தூத்துக்குடி: மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மீன் வியாபாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தூய்மைப்படுத்தும் பணிக்காக மூன்று நாள்கள் மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது: காரணம் என்ன?
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது: காரணம் என்ன?

By

Published : Jun 19, 2020, 12:30 PM IST

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த இடங்கள் குறித்து அலுவலர்கள் விசாரித்தனர். விசாரித்ததில், அவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக மூன்று நாள்கள் மூடுவதாக மீன் வளத்துறை அறிவித்ததுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 240 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details