தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் விலை அதிகரிப்பு! - Fish Market at Thoothukudi

தூத்துக்குடியில் மீன் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

Etv Bharat தூத்துக்குடியில் மீன்களின் விலை அதிகரிப்பு
Etv Bharat தூத்துக்குடியில் மீன்களின் விலை அதிகரிப்பு

By

Published : Feb 25, 2023, 3:45 PM IST

தூத்துக்குடியில் மீன்களின் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி:திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். கடலில் தங்கி மீன் பிடிக்கும் இந்த மீனவர்கள் வார நாட்களில் சனிக்கிழமை அதிகாலை கரை திரும்புவர். இதனால், சனிக்கிழமைகளில் மீன்களை வாங்கப் பொதுமக்கள் அதிகளவில் செல்வார்கள்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை திரேஸ்புரம் மீன்பிடி துறைமுக ஏல கூடத்தில் மீன்களை வாங்கப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். ஆனால் மீன் வரத்துக் குறைவாக இருந்த காரணமாக மீன்களின் விலை உயர்ந்திருந்தது. மீன் வகையான, சாலை மீன் ஒரு கூடை ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

சீலா மீன்கள் 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் வரத்துக் குறைவு காரணமாக மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க:மரக்காணம் மீனவர் வலையில் சிக்கிய 10 கிலோ அம்பர்கிரிஸ்!

ABOUT THE AUTHOR

...view details