தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கந்தன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிணவறை பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் இதர காவலர்கள், புகார் அளிக்கச் சென்ற கந்தனை உள்ளே அனுமதிக்காமல் வாசலிலேயே நிற்க வைத்துளனர்.