தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிடாததற்கு காரணம் இதுதான்... எர்ணாவூர் நாராயணன்

திமுக தலைமை அழைத்து பங்கீடு குறித்து பேசும் என மெத்தனத்தில் இருந்துவிட்டதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிக இடம் கிடைக்கவில்லை என சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வேதனைத் தெரிவித்துள்ளார்.

எர்ணாவூர் நாராயணன் பேட்டி
எர்ணாவூர் நாராயணன் பேட்டி

By

Published : Feb 10, 2022, 10:48 PM IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் இன்று (பிப்.10) தூத்துக்குடி வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கு சமத்துவ மக்கள் கழகம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத்திற்கு என தனிப்பட்ட முறையில் பங்கீடுகள் எதுவும் இல்லாதது வருத்தம்தான்.

எர்ணாவூர் நாராயணன் பேட்டி

திமுக தலைமை மீது நம்பிக்கை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததுமே திமுக தலைமையிடம் சென்று எங்களுக்கான பங்கீட்டினை கேட்டு வாங்கியிருக்க வேண்டும். ஆனால், திமுக தலைமை அழைத்து பங்கீடு குறித்து பேசும் என்ற நம்பிக்கையுடன் மெத்தனத்தில் இருந்து விட்டோம்.

மேலும் கட்சிக்குள் ஏற்பட்ட காலதாமதத்தின் காரணமாக சரியான பங்கீட்டினை கேட்டுப் பெற முடியவில்லை. இது எங்களுடைய தவறுதான். இருப்பினும் உடன்குடி பேரூராட்சியின் 2-வது வார்டில் சமத்துவ மக்கள் கழகம் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

வெற்றி நிச்சயம்

நிச்சயம் எங்களது வேட்பாளர் வெற்றி பெறுவார். தொடர்ந்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details