தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஞ்சின் கோளாறு; நடுக்காட்டில் தவிக்கவிட்ட ரயில்! - இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், எஞ்சின் பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

பாதிவழியில் பயணிகளை தவிக்கவிட்ட ரயில்

By

Published : May 18, 2019, 3:18 PM IST

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. நள்ளி சத்திரம் இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் எஞ்சின் பழுதாகி காட்டுப்பகுதியில் நின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், தூத்துக்குடியில் இருந்த மைசூர் வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.

கோவில்பட்டி ரயில்நிலையம்

இதே போல் நாகர்கோவில் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரயில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலும், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நெல்லையில் இருந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி செல்லும் ரயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த ரயில்களும் புறப்பட்டு சென்றது.

ABOUT THE AUTHOR

...view details