தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சசிகலாவை எளிதாக எடை போடக்கூடாது' - கருணாஸ் எம்எல்ஏ

தூத்துக்குடி: சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது; பொறுத்திருந்து பாருங்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

MLA karunas
எம்எல்ஏ கருணாஸ்

By

Published : Jan 29, 2021, 7:48 AM IST

முக்குலத்தோர் புலிப்படையின் தேசிய தெய்வீக பரப்புரை யாத்திரை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’கூவத்தூரில் என்னை போன்று 110க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட காணொலிகளை ஒப்பிட்டு பார்த்தாலே மக்களுக்கும் உரிய விடை கிடைத்துவிடும்.

மற்ற சமுதாய மக்கள் எப்படி சுபிட்சமாக இந்த தமிழ்நாட்டில் வாழ வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறாரோ அதேபோலவே, முக்குலத்தோர் சமுதாய மக்களும் சுபிட்சமாக வாழ வேண்டும் என அவர் நினைக்கவேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் முக்குலத்தோர் புலிப்படைக்கான அரசியல் அடையாளத்தை கொடுத்தவர். அதற்கு சசிகலா உறுதுணையாக இருந்தார்.

இதையும் படிங்க:தனித்துப் போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை: விஜய பிரபாகரன்!

இதை நான் சாகும் வரைக்கும் சொல்லுவேன். மறைந்த முதலமைச்சர் தனது உயிரை கொடுத்து உருவாக்கிய இந்த ஆட்சி கலைந்து விடக்கூடாது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக உருவாக்கி நியமனம் செய்து விட்டுச் சென்ற இந்த ஆட்சிக்கு எந்த ரூபத்திலும் என்னால் ஒரு சிறு இடையூறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என கவனமா இருக்கிறேன். இந்த நிமிடம் வரை நான் அதிமுகவின் தோழமை சட்டப்பேரவை உறுப்பினராக தான் இருக்கிறேன். இது தொடரும்’ என்றார்.

முக்குலத்தோர் எந்த பதவிக்கும் வரக்கூடாது என பாஜக வியூகம் அமைக்கிறதா என எழுப்பிய கேள்விக்கு, ’அதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை. அதிமுகவின் தலைமை எந்த ரூபத்திலும் சசிகலாவுக்கு சென்று விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தது நரேந்திர மோடியும் அமித் ஷாவும்தான். இது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்.

பிரதமர் மோடி வல்லமை உடையவராக இருந்தாலும் கூட அன்றைய நேரத்தில் கூவத்தூரில் தமிழ்நாட்டின் முதலமைச்சரை தீர்மானித்தது உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்களை ஒருங்கிணைத்த நேரத்தில் மத்திய அரசு கொண்டுவர நினைத்தது வேறு ஒருவரை. இது எல்லாருக்குமே தெரியும்.

அதை உடைத்து நாட்டின் பிரதமரின் விருப்பத்திற்கு எதிராக வேறு ஒருவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தீர்மானம் செய்தவர் சசிகலா என்பதை யாரும் என்றும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது. மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகியோர் ஒரு கட்சியின் தலைமைப் பதவி மற்றும் முதலமைச்சர் என்கிற பதவியில் இருந்தார்கள்.

எம்எல்ஏ கருணாஸ்

எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவரால் இப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. யாரையும் எளிதில் எடை போடக்கூடாது. பொறுத்திருந்து பாருங்கள்’ என பதிலளித்தார்.

இதையும் படிங்க:வல்லக்கோட்டை முருகன் கோயிலில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details