தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திராவிட மாடல்' எந்த அமைச்சருக்காவது அர்த்தம் தெரியுமா? - வைகைச்செல்வன் சவால்! - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

கோவில்பட்டியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், திராவிட மாடல் என்றால் எந்த அமைச்சருக்காவது விளக்கம் தெரியுமா..? என்றும் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? எனவும் சவால் விடுத்துள்ளார்.

Does any minister know Dravidian model meaning Ex minister Vaigai Selvan challenged
திராவிட மாடல் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது எந்த அமைச்சருக்காவது தெரியுமா

By

Published : Mar 7, 2023, 12:55 PM IST

'திராவிட மாடல்' எந்த அமைச்சருக்காவது அர்த்தம் தெரியுமா? - வைகைச்செல்வன் சவால்!

தூத்துக்குடி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

கடம்பூர் ராஜூ பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் யாரும் பார்த்திடாத தேர்தலாக அமைந்துள்ளது. திகில் தொடர் மாதிரி தமிழ்நாடு மாறி உள்ளது அந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் என வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

அதிமுக 6 மாத குழந்தையாகத் திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 3 முறை இழந்த சின்னத்தைத் திரும்ப பெற்ற ஒரே கட்சி அதிமுக, 2011ல் தன்னந் தனியே நின்று தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக, எனக்கு பிறகு 100 ஆண்டுகள் ஆன பின்னும் இந்த இயக்கம் இயங்கும்.

திமுக திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை போல் ஈரோடு கிழக்கு பார்முலா என்று புதிய பார்முலாவை கொண்டு வந்துள்ளது. வாக்களித்த வாக்காளர்களை இருமாப்பாக பேசி உள்ளார் பொன்முடி. குப்பைக்கு வரி போட்ட ஊரு ஈரோடு அந்த அளவிற்கு மோசமாக தொகுதியை வைத்து உள்ளனர்.

பெரியார் பிறந்த மண்ணில் டோக்கன் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்கவில்லை மாநில தேர்தல் ஆணையத்திடம் தான் கூட்டணி வைத்தார்கள். இலங்கை ஈழ தமிழர்கள் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இறந்த பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை. இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டேனா என்று கேட்டவர் ஈவிகேஎஸ்.

ஈரோடு மாடல் தேர்தல் போல் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜனநாயகத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். 2026 வரை திமுக ஆட்சி நீடித்தால் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று பேசினார்.

முன்னாள் வைகைச்செல்வன் பேசுகையில், திராவிட மாடல் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது எந்த அமைச்சருக்காவது தெரியுமா நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று சவால் விட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட மாடல் கொள்கை வெற்றி பெற்று உள்ளதா? இல்லை கொலுசு வெற்றி பெற்று உள்ளதா? வாக்காளர் எஜமானர்களை வேலைக்காரர்கள் ஆக்கியதே இந்த திமுக தான், இந்திய தேர்தலில் கருப்பு நாள் திருமங்கலம் இடைத்தேர்தல் அதேபோலத்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் என்று கூறினார்.

இதையும் படிங்க: திராவிட மாடலை சிலர் எதிர்ப்பது ஏன்? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details