தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை, பெருமாள் கோவில் கல்மண்டப பணிக்கு அடிக்கல் நாட்டுதல், கிராம மக்கள் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகமாக பயன்பெற்றது தமிழ்நாடு மக்கள் தான்.
‘எதிர்காலத்தில் திமுக காணாமல் போய்விடும்’ - தமிழிசை சவுந்தரராஜன் - lose in the
தூத்துக்குடி: உட்கட்சி பூசல், வாரிசு அரசியலால் திமுக வருங்காலத்தில் மக்களிடம் வலுவிழந்து விடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த அளவிற்கு மத்திய அரசு திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. இதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எல்லா செயல்பாடுகளும் ஆமை வேகத்தில் நடைபெற்றது. ஆனால் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு அரசின் அனைத்து செயல்பாடுகளும் மிக விரைவாக முடிக்கப்படுகிறது. வேலூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமே திமுக தலைவர் ஸ்டாலின் தான். தென் தமிழ்நாட்டில் திமுகவின் உட்கட்சி பூசலால் கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது.
திமுகவில் வாரிசு அரசியலுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திமுகவில் இன்று உதயநிதி வாரிசு அரசியல் தொடங்கியுள்ளார். அரசியலில் உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறதென்று அவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருகிறார்? என்பது தெரியவில்லை. ஆகவே உட்கட்சி பூசல், வாரிசு அரசியலால் திமுக வருங்காலத்தில் மக்களிடம் சென்று சேராமல் வலுவிழந்து விடும் என்றார்.