தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் ஏற்பாட்டின் பேரில் மட்டக்கடை, வடக்குராஜா தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கபட்டது.