தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், அதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் அப்போது பேசிய கனிமொழி, தமிழ்நாட்டு மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி கொண்டு வந்த நீர் மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்.
அதேபோல், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும், குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு திமுக சார்பில் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு குடிநீர் வழங்கிய கனிமொழி எம்.பி மேலும், ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.