தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் ரூ.1 கோடி வழங்கிய எம்.பி கனிமொழி! - மணல் கொள்ளையை தடுக்க குழு

தூத்துக்குடியில் மணல் கொள்ளை விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வி.ஏ.ஓ குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.1 கோடி நிவாரணத்தை கனிமொழி எம்பி வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 1, 2023, 1:29 PM IST

Updated : May 1, 2023, 1:54 PM IST

லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் ரூ.1 கோடி வழங்கிய எம்.பி கனிமொழி!

தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக (VAO) பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ் (55). கடந்த மாதம் இவரது அலுவலகத்தில் புகுந்த கும்பல் ஒன்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட வெட்டியது. இதில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினரிடம் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் அளித்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறுகையில், நேர்மையான அதிகாரியை இழந்துவிட்டோம். குடும்பம் சோகத்தில் வாடி கொண்டிருக்கிறது. இவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்து இருந்தார். அந்த காசோலையை தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை டிஎஸ்பி சுரேஷ் தலைமையில், விசாரணை செய்யப்பட உள்ளது. அந்த 2 பேர் மீதும் குண்டாஸ் போட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், மேலும், அந்த பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு.. மணல் கடத்தல்காரர்களின் அட்டகாசம்

Last Updated : May 1, 2023, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details