தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்துவதும், எதிர்க்கட்சியும் திமுக தான்' - கனிமொழி எம்.பி., - திமுக உட்கட்சித் தேர்தல்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்துவதும், எதிர்க்கட்சியாக செயல்படுவதும் திமுக தான் என்று, அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

பொதுக் கூட்டம்
பொதுக் கூட்டம்

By

Published : Nov 5, 2020, 8:40 PM IST

தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி, 'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 216 இடங்களில் இன்று (நவம்பர் 5) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி முன்னிலை வகித்தார்.

அப்போது உரையாற்றி கனிமொழி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறுவதற்கு திமுகவின் போராட்டமே காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் சவால்கள் அனைத்தையும் வென்ற கட்சி திமுக என்றும், இங்கு ஆட்சி நடைபெறுகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்துவதும், எதிர்க்கட்சியாகவும் திமுகவே இருப்பதாக கூறிய கனிமொழி, தமிழ்நாட்டில் முதலீடு கொண்டு வருவது குறித்து அரசு இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

கனிமொழி

அதைத் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருவதாகவும், நாடாளுமன்றத்தில் கனிமொழியின் செயல்பாடுகளை நினைத்து தான் பெருமைகொள்வதாகவும் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய அவர், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவில்லை என்றும், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு கொடுத்ததே எடப்பாடி பழனிசாமி தான் என்று குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details