தூத்துக்குடி : திமுக மாநகர மீனவர் அணி அமைப்பாளரராக இருப்பவர் டேனி, இவரது மனைவி மெட்டில்டா 24ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் 24ஆவது வார்டு பகுதியில் உள்ள முத்துநகர் கடற்கரைப் பூங்கா ஸ்மார்ட் சிட்டி பணியின்கீழ், 4 கோடியே 45 லட்சம் மதிப்பில் பணிகள் முடிந்த நிலையில், கடந்த வாரம் எம்.பி. கனிமொழி மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கூட்டாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், முத்துநகர் கடற்கரையில், பானிபூரி கடை அமைப்பதில் கவுன்சிலர் மெட்டில்டாவின் கணவர் டேனி தலையிட்டு குறிப்பிட்டவர்கள் தான் இப்பகுதியில் கடை வைக்க வேண்டும் என்று ஒரு பெண்ணிடம் பேசும் ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
AudioLeak: பெண்ணை மிரட்டும் திமுக நிர்வாகி: இது தூத்துக்குடி சம்பவம்! - பானிபூரி கடை
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பானிபூரி கடை அமைப்பது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவர் அணி அமைப்பாளர் பெண்ணை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது.
பெண்ணை மிரட்டும் திமுக நிர்வாகி
இதையும் படிங்க :உச்சநீதிமன்றம் செல்வோம் - நளினி வழக்கறிஞர்